கண்மணி - அவள் இன்றி என் மனதும் அசையாது!

    எனது வளர் இளம் வயதில் இருந்தே என் அகத்தின் தேடலானது தொடங்கியது. தேடலின் கடினம் என் தாய் தமிழின் வயதை காண முயல்வதை போல் என எனக்கு அன்று தெரியவில்லை. நானும், என் தேடலும் என்று ஓடிக்கொண்டிருந்த நாட்கள் அது. என்‌ தேடலின் முதல் படி என் மாமன் மகள் எழில். என் மனதானது மலையில் இருந்து கீழ் நோக்கி சருக்கி விழும் காட்டருவி போல சருக்கியது. ஒரு தலை காதலுடனே காலமும் வேகமாக முன்னிட்டு செல்ல அந்த ஒரு நாளில் எதற்கும் துணிவுற்ற போர் வீரனை போல் என் காதலை அவளிடம் கூறினேன். எதுவும் கூறாமல் சென்றுவிட்டால். இரண்டு பகல் சென்ற பின் மூன்றாம் பகலில் அவள் கண்ணில் காதலை உணர்ந்தேன். அன்று முதல் என்‌ மனக்கோட்டையில் நாள் தோறும் தீப ஒளி திருநாள் தான். தீபத்தின் பேரொளிக்கு தேவையான காதல் என்னவோ அவளிடம் மிக வேகமாக தீர்ந்து போனது. வாழ்வின் காதல் பாதையில் ஓர் இடத்தில் விழி தெரியாமல் நின்றேன். என் விழிக்கு ஒளியாய், விண் வெளிக்கு வழியாய் வந்தால் என் கண்மணி. நான் என் வாழ்வின் செய்த மகத்தான செயல்களில் ஒன்று என் படவரி கணக்கில் இருந்து அவளுக்கு பின்தொடர விருப்பு கொடுத்தது தான். என் இருள் பாதையின் ஒளி படர தொடங்கியது அங்கு தான். ஒரு வழிப்பாதையான செய்திகள் இரு வழிப்பாதையான. அரட்டையில் செய்திகளானது தளும்பியது. நாட்கள் செல்லச் செல்ல நட்பு பெருகியது, இடைவெளி குறைந்தது. கருந்துளையின் ஆற்றல் அவளிடம் உள்ளது போலும், என் நேரமும் அவளுக்காக வளைந்து கொடுத்தது. 

    எதோ ஒரு கட்டத்தில் என் உள் மனது என் வாழ்வின் ஒளி இவளா என ஆராய, என் ஆழ் மனது இவளின் அன்பில் உராய, அதில் உண்டாகிய வெப்பம் கதிரவனின் மேனியை கூட தீக்கிரையாக்கும் அளவில் இருந்தது. என் மனக்குழப்பம் நீங்க இது காதல் தான் என் உறுதி செய்ய வந்தான் ஒரு வழிப்போக்கன். என் வாழ்வின் வழியை மிகச்சரியாய் என் விழிக்கு காண்பித்தான்.  எந்தை சேயோனை வேண்டி, மனத்தீரம் கொண்டு என் காதலையும் அவளிடம் கூறிவிட்டேன். அடுத்த பகல், விசும்பின் மின்னல் கீற்று போல் கண்களை கொண்ட என் கண்மணியின் பதில் என் வாழ்வின் தொடக்கம் என்று உணர சற்று நேரம் எடுக்கதான் செய்தது. என் மனதின் உணர்ச்சி சீற்றம் வார்த்தைகளால் அவ்வாறு எளிதாக விவரித்துவிட முடியாது. அவள் அகக்கடலில் காதல் அழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதாக உணர்ந்தேன். அவள் காதல் மழை பொழியத்தொடங்கினாள். திக்கு தெரியாமல் இருள் நிறைந்த அடவி பாதையில் நின்ற என்னை ஒரு எழில்மிகு உலகிற்கு ஒளி வேகத்தில் அழைத்து வந்துவிட்டால். முதல் நாள் முதல் இந்நாள் வரை அவளின் அன்பு மாறவில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்று எண்ணி இருந்தேன் அவ்வாறு எண்ணியது ஒரு பிழை என்று  உணர்ந்த நொடியில் தெரிந்தது இவளின் அன்பும் மாறாதது என்று. 

கண்மணி அவளின்றி என் மனதும் அசையாது!

    Stay connected with Madai Thirantu, the blog by Er. Nishanth Manikumar BE., BSc., where ideas come to life in Tamil and English. Get updates on the latest articles, exclusive insights, and join meaningful discussions.

👉 Click the link to follow our official WhatsApp channel: https://whatsapp.com/channel/0029Vb308E05PO17OF6THZ2L

    Let’s open doors (மடை திறந்து) to new perspectives and knowledge!

Post a Comment

0 Comments