அன்பில் அவள்
அழகே அழுக்காறு (பொறாமை) கொள்ளும் பேரழகு என்ற உவமைக்கு தக்க எடுத்துக்காட்டாக பாடப்புத்தகத்தில் இருக்க வேண்டியவள் அவள். பிரம்மன் யாழ் இசை கேட்டுக்கொண்டு இருந்த வேளையில் செய்த சிற்பம் அவள். சித்தன்னவாசல் ஓவியம் கூட அவளது அழகில் பொழிவு இழந்து விடுகிறது. எல்லோரா குடைவரை கோவிலை மிஞ்சும் நடமாடும் மனவரை கோயில். இப்படி உவமைக்கு மறுபொருளாய் திகழும் அவளே என் வாழ்வில் யாதுமாகி நின்ற “செங்காந்தள்“. அவளை கண்ட நொடியில் என் மனம் ஒளியின் வேகத்தில் (Speed of Light) அவள் நோக்கி சீரியதால் சிறப்பு சார்பு கோட்பாட்டின் (Special Relativity Theory) அடிப்படையில் நேரம் நகராமல் தவித்தது. அவளிடத்தில் காதலை உணர்ந்த நேரத்தில் இருந்து இதுநாள் வரையில் என் காலம் நகரவில்லை. பல முறை என் காதலை தெரிவிக்க முயற்சி செய்தும் அது தோல்வியை மட்டுமே தழுவியது. அவளுக்கே தெரியாமல் அவளை ரசித்த நொடியில் என்னை மறந்து தவித்த நாட்களும், அவளை காணாமல் தவித்த நாட்களும் அடைமழை காலநிலை மற்றும் வேனில் காலநிலை மாற்றத்தையும் நினைவுபடுத்தியது. ஒளியின் வேகம் மாறிலி (Constant) இல்லை என்று பாவம் விஞ்ஞானிகளுக்கு தெரியவில்லை அவள் அழகிய முகத்தை பார்த்துவிட்டு (Reflected Light Rays) செல்லும் ஓளி அதன் வேகத்தை விட பன்மடங்கு வேகத்தில் செல்கிறது என்று.
எதார்த்தமான ஒரு பார்வை மின்னல் கீற்று போல அதீத மின் அழுத்தத்தை கொண்டு என் மனதை கிழித்துவிடுகிறது. மரபு வேலிக்குள் நீ இருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை… இமைய மலை என தெரிந்திருந்தும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை என்ற பாடலின் வரிகளுக்கு ஏற்றவாறு என் வாழ்க்கை இருக்க உன் மீது பட்டு சிதறிய ஓளித்துகள்களை போல எங்கோ செல்லக்கிறது என் மனம்.
Stay connected with Madai Thirantu, the blog by Er. Nishanth Manikumar BE., BSc., where ideas come to life in Tamil and English. Get updates on the latest articles, exclusive insights, and join meaningful discussions.
👉 Click the link to follow our official WhatsApp channel: https://whatsapp.com/channel/0029Vb308E05PO17OF6THZ2L
Let’s open doors (மடை திறந்து) to new perspectives and knowledge!

0 Comments