நம்மூரில் ஒரு சொல் இருக்கிறது அதாவது மரணமும் வரியையும் தவிர்த்து எதுவும் நிரந்தரம் இல்லை. சிலரால் வரியைக் கூட செலுத்தாமல் தவிர்க்க இயலும், ஆனால் மரணத்தை தவிர்க்க இயலாது.
நீங்கள் என்றாவது நினைத்தது உண்டா மரணித்த பின் நம் உடலுக்கு என்னவாகும் என்று?
அறிவியல் கண்ணோட்டத்தில் மரணத்தைக் குறித்து காணலாம் வாருங்கள்!!!!
ஒருவர் மரணிக்கும் பொழுது இருதயம் ரத்தத்தை தமனிக்கு அழுத்தாது. இதனால் இரத்த ஓட்டம் நின்று போகும். இது எல்லோரும் அறிந்ததே. இதனால் செல்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். செல்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காத பட்சத்தில் செல்கள் உடைந்து, இறந்து போகும். செல்களின் வகையைப் பொறுத்து செல் மரண நேரம் மாறுபடும். அதாவது மூளை செல்கள் ஆக்சிஜன் காலியாகும் பட்சத்தில் ஒரு நிமிடத்துக்குள்ளாகவே இறந்து விடும் ஆனால் தோல் செல்கள் 24 மணி நேரம் வரை தாங்கும்.
ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் உயிரற்ற உடலின் உள் கார்பன்-டை-ஆக்சைடு அதிகமாக சூழ்ந்திருக்கும். அதனால் அங்கு அமிலத் தன்மை அதிகரிக்கும். அமிலத்தன்மை செல்களில் உள்ள சவ்வை(Membrane) அரிக்கும். சில வகையான நொதியை(Enzyme) வெளிப்பட செய்யும்.அந்த நொதி செல்களை உள்ளிருந்து வெளியாக உண்ண தொடங்கும். இதுதான் மனித உடலின் சிதைவு (Decomposition) நிலையில் முதன்மை நிலை. இது ஆட்டோலைசிஸ் (Autolysis) என்று அழைக்கப்படுகிறது.
நீங்கள் மரணித்த ஒருவரை கண்டிருந்தால் அவர்கள் தோல் நிறம் சாம்பல் நிறத்தில் இருப்பதை கவனித்திருக்கலாம். அதன் அறிவியல் காரணம் மிக மிக எளிதானது. ரத்த ஓட்டம் தான் தோலுக்கு நிறத்தை அளிக்கிறது. இரத்த ஓட்டம் நற்கும் பட்சத்தில் தோலின் நிறம் மாறுகிறது.
இருதயத் துடிப்பு நின்ற உடன் சற்றென்று உடலின் வெப்பநிலை குறையத் தொடங்கும். உடல் வெப்பம் அறையின் வெப்பத்தைக் அடையும்வரை 1.5°F(0.83°C)/மணி என்ற விகிதத்தில் குறையும்.
மரணித்த 3 மணி நேரம் பின்பு உடல் விரைப்பு ஏற்படும். இதனால் மூட்டுகளை அசைக்க முடியாது. இந்த விரைப்புத்தன்மை கண் இமையில் தொடங்கி பாதம் வரை பரவும்.
இதெல்லாம் உடலுக்கு வெளியில் நடக்க உள்ளே ஒரு மிகப்பெரிய செயல்முறை நடந்து கொண்டிருக்கும். நம் உடலில் பல்லாயிரக்கணக்கான பாக்டீரியா உள்ளது. நம் உடலில் செல்கள் அழிந்தாலும் குடலில் உள்ள பாக்டீரியா அழியாது. மரணித்ததும் இந்த பாக்டீரியாக்கள் உள்ளிருந்து பிணத்தை உண்ணத் தொடங்கும். இந்த செயல்முறை காரணமாக வாயுக்கள் சூழ தொடங்கும். உறுப்புகள் நீராகவும், வாயுவாகவும் சிதைந்து அதனால் உடல் வீங்கத் தொடங்கும்.
உள்ளிருந்து உடலைத் துளைத்துக் கொண்டு புழுக்கள் வெளியில் வந்து வெளி உடலை உண்ண தொடங்கும். உடல் கடுமையான துர்நாற்றத்தை வெளிப்படுத்தும் மேலும் உடல் முழுவதும் கருமையாக மாறிவிடும். இது 10 முதல் 20 நாட்களுக்குள் நடக்கும். 25 முதல் 50 நாட்களுக்குள் உங்கள் தலைமுடி மற்றும் தோலை முழுவதுமாக அழித்து விடும். எலும்புக்கூட்டை தவிர்த்து ஒன்றும் இல்லாத நிலைக்கு சென்றுவிடும் உடல்.
வருடங்கள் ஓட ஓட எலும்புக்கூடு மண்ணின் பல அடுக்குகளுக்கு இடையில் புதைந்துவிடும். முழுவதுமாக சீதையை ஆயிரம் வருடம் கூட ஆகலாம்.
இயற்கையின் படைப்பில் நம் உடல் மற்ற உயிரிக்கு உணவாக மாறுகிறது இதுவே அந்த உயிரிக்கும் நடக்கிறது.
குறிப்பிட்ட ஒருவரின் வாழ்க்கை முடிவடைந்தாலும் வாழ்க்கை சக்கரம் சுழன்று கொண்டேதான் இருக்கிறது.
எதற்கும் உதவாமல் மக்கும் உறுப்புகளை தானம் செய்வது மூலமாக அடுத்தவரின் உயிரை காக்கலாம். கண், சிறுநீரகம், இருதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளை தானம் செய்வதன் மூலமாக நாம் இறந்த பின்பும் நம் உறுப்புகள் வாழ்ந்து கொண்டே இருக்கும்
தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம்
Stay connected with Madai Thirantu, the blog by Er. Nishanth Manikumar BE., BSc., where ideas come to life in Tamil and English. Get updates on the latest articles, exclusive insights, and join meaningful discussions.
👉 Click the link to follow our official WhatsApp channel: https://whatsapp.com/channel/0029Vb308E05PO17OF6THZ2L
Let’s open doors (மடை திறந்து) to new perspectives and knowledge!

0 Comments