அழகான கிராமத்தில் ஒரு அன்பான, ஆரோக்கியமான வாழ்க்கை

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளம் வட்டத்தில் சிறிய அழகிய கிராமம். எங்கள் ஊரை சுற்றியுள்ள கிராமங்களின் பெயரை விட எங்கள் கிராமத்தின் பெயர் சற்று வித்தியாசமான பெயர் தான். சிறுவயது முதலே எப்படி இந்த பெயர் வந்தது என்று மிகக் குழப்பமான நிலையில் பலமுறை யோசித்துள்ளேன். அதற்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது ஆனால் அதை இப்போது கூறினால் அதை எழுதவும்  முடியாது. அதற்கு போதிய நேரமும் இல்லை.

நான் பள்ளிப் பருவம் அதாவது முதலாவது வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை படித்தது எல்லாமே ஒரே பள்ளியில் தான். பள்ளியும் இணைக் கல்வி (Co-ed) அளிக்கும் பள்ளிகாலையில் அழுதுகொண்டே கிளம்பி, புத்தக பையை தோளில் சுமக்க முடியாமல் பள்ளி வாகனத்திற்காக காத்திருந்து பின்பு வாகனம் வந்தவுடன் ஏறி பள்ளி சென்று வகுப்பில் சென்று அமர்ந்தால் தூக்கம் தூக்கமாக வரும். இன்னும் ஞாபகம் இருக்கிறது. எப்போது  பள்ளி முடியும் என்று தோன்றும் அளவிற்கு கொடுமை செய்வார்கள்.சிறுவயதில் எதாவது சேட்டை செய்து விட்டால் சகமாணவிகள் அருகில் உக்கார வைத்துவிடுவார் வகுப்பு ஆசிரியை. அப்பொழுது அது தான்  மிக பெரிய தண்டனை. நான் ஒருமுறை அந்த தண்டனை பெற்று இருக்கிறேன். இப்பொழுது அதை நினைத்தால் சிரிப்பாகத்தான் வருகிறது .  பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று தாத்தா வாங்கி வைத்திருக்கும் வடையை உண்டுவிட்டு விளையாட சென்று விடுவோம்.என் தெரு சேக்காளிகளுடன் சேர்ந்து விளையாடி மகிழ்வது எனது அன்றாட வழக்கம்மேலும் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு விளையாட்டு கலை கட்டும். அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தில் பம்பரம், கோலிக்காசில்லாங்குச்சு. பம்பரம் விளையாட்டில்  தரையில் படாமல் பம்பரத்தை கையில் சுற்றி பெண்கள் முன்னாள் மன்னனாய் திகழ்பவரும் உண்டு. மேலும் மற்றவர்கள் பம்பரத்தை உடைப்பதற்கு என்று ஒரு ஆக்கர் மன்னன் எல்லா கூட்டத்திலும் இருப்பான்.
கோலிக்காய் விளையாட்டில் எவ்வளவு தூரத்தில் கோலிக்காய் இருந்தாலும் அதை துல்லியமாக அடிக்கும் அளவிற்கு திறமை படைத்தவர்களும் உண்டு. அதுபோக நாடு பிரிச்சி  என்று விளையாடும் பொழுது ஏதோ சொந்த நாட்டையே பிரிக்கும் அளவிற்கு கோபமும் சண்டையும் போட்டுக்கொள்வோம். மரக்குரங்கு விளையாட்டில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இப்படி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும் விளையாட்டுகளை விளையாடிய கடைசி தலைமுறையினர் நாங்கள் தான்.
இப்பொழுது கிராமங்களே மாறும் நிலையில் வந்து கொண்டிருக்கிறது வயக்காடுகளெல்லாம் வீடுகளாய் சூழ்ந்திருக்கின்றன.
நான் பொறியியல் படிப்பிற்காக பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு சென்னை சென்று விட்டேன். அவ்வப்போது விடுமுறை தினத்திற்காக ஊருக்கு வரும் பொழுது எனது ஊரின் திசை எனக்கே  தெரியாத அளவிற்கு வீடுகள் பல்கிப்பெருகின.. பெரும்பாலும் வயல்களை அழித்து வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. மக்கள் தொகை பெறுகும் பொழுது வேறுவழியில்லை, கட்டி தான் ஆக வேண்டும். கிராமம் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தது. மிகுதியான சிறுவர்கள் கணினியிலும் கைபேசிகளிலும் விளையாடிக்கொண்டிருந்தனர். நான் மேல் படிப்பிற்காக சென்றது வெளி மாவட்டம் மற்றும் தற்போதும் வேலை நிமித்தமாக வெளியூரில் தான் உள்ளேன் அதனால் எனது  பேச்சு வழக்கு சற்று  வேற்று பேச்சுவழக்கோடு கலந்து இருக்கும். ஆனால் என் கிராமத்திற்கு வந்த உடன் சிறுவர்கள் பேசிக்கொள்ளும் எனது தாய் தமிழ் திருநெல்வேலி பேச்சு வழக்கு கேட்கும் போது அளவற்ற மகிழ்ச்சி தோன்றும். இனி வரப் போகும் தலைமுறையினருக்கு கிராமங்கள் இப்படித்தான் இருந்தது என்று தெரிய வாய்ப்பே இல்லை. வளர்ச்சி ஒரு ஒருவிதத்தில் நன்கு உபயோகமானதாக இருந்தாலும் அதனால் கிராமங்களின் ­­அழகு பொலிவிழந்து கொண்டே தான் போகிறது. அதனை யார் முயன்றாலும் தடுக்க முடியாதுஇனி வரப்போகும் காலங்களில் கிராமங்களும் நகரங்களும் ஒன்று போலத்தான் காட்சியளிக்க போகின்றன.
முடிந்த அளவு கிராமத்தின் அழகையும் வனப்பையும் மீட்போம்.
குறிப்பு: இது யாருடைய வாழ்க்கையையும் குறிப்பிட்டது அல்ல, முழுக்க முழுக்க கற்பனை கதையாகும்.

Stay connected with Madai Thirantu, the blog by Er. Nishanth Manikumar BE., BSc., where ideas come to life in Tamil and English. Get updates on the latest articles, exclusive insights, and join meaningful discussions.

👉 Click the link to follow our official WhatsApp channel: https://whatsapp.com/channel/0029Vb308E05PO17OF6THZ2L

Let’s open doors (மடை திறந்து) to new perspectives and knowledge!

Post a Comment

0 Comments