உங்களால் சூரியனை கூடைப்பந்து அளவிற்கு சுருக்க முடிந்தால் பூமி எள் விதையின் அளவே இருக்கும் அவ்வளவு பெரியது நம் சூரியன்.மிகவும் சூடான நெருப்பு பந்தான சூரியன் பெரிதாக இல்லாவிடில் நம் பூமி சூரியனை சுற்றுமா? இல்லை சூரியன் பூமியை சுற்றுமா? மற்ற கோள்கள் என்ன ஆகும்? வாருங்கள் காணலாம்!
சூரியனை பூமியை கொண்டு நிரப்ப வேண்டுமானால் நமக்கு 1.3 மில்லியன் பூமி தேவைப்படும் அவ்வளவு பெரியது நம் சூரியன் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் 99% நிறைகளை(mass) சூரியன் உள்ளடக்கும் அளவு பெரியது.பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் மட்டுமே பூமியிலிருந்து சிறிதாக தெரிகிறது.
ஒருவேளை சூரியன் பூமியை விட சிறிதாக இருந்தால்???
- பூமி வாழும் தன்மையை (Habitable) இழக்கும்
- சூரியன் தன் எரியும் தன்மையும் இழக்கும்.
இந்த அண்டவெளியில் அளவு (size) மற்றும் தூரம் (Distance) இன்றியமையாதது .அதனால்தான் பூமி செவ்வாய் கிரகம் போன்று குளிர்ந்து இல்லாமலும் வெள்ளி கிரகம் போன்று அதிக வெப்பத்தால் இறந்த நிலையில் இல்லாமலும் உயிர் வாழக்கூடிய (Habitable Zone) தன்மையில் உள்ளது.
நாம் மட்டுமே சூரிய குடும்பத்தில் வாழும் தன்மை உடைய இடத்தில் (Habitable Zone) இருக்கிறோம்.
சூரியனின் அளவு, பூமியின் அளவு, சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரம்,நம் பூமியை உயிர் வாழும் தன்மை உடையதாக உள்ளாக்கியுள்ளது
ஒரு நட்சத்திரத்தின் நிறை (Mass) தான் அதன் நிறம் (Colour) மற்றும் வெப்ப நிலையை (Temperature) தீர்மானிக்கும்.
- பெரிய நட்சத்திரம் (Supergiant) மிகவும் வெப்பத்துடன் நீலநிறத்துடன் காணப்படும்.
- சிறிய நட்சத்திரம் (Red Dwarf) குறைந்த வெப்பத்துடன் சிவப்பு நிறமாக இருக்கும்.
ஒருவேளை சூரியன் அளவில் சிறியதாக மாறினால்???
- அது சிவப்பு நிறமாகவும் அதன் Habitable Zone சிறியதாகவே இருக்கும்
ஒரு நட்சத்திரம் என்பது பெரிதாக இருந்தாலும் சரி சிறிதாக இருந்தாலும் சரி அணுப்பிளவு (Nuclear Fusion) நடந்தால்தான் நட்சத்திரம் எனும் அந்தஸ்தை பெறும்.
நாம் நிறைய சிறிய நட்சத்திரத்தை ஆய்வு செய்தது இல்லை ஆனால் நாம் ஆய்வு செய்த சிறிய நட்சத்திரம் 10 பூமியை உள்ளடக்கும் அளவுடையதாக இருந்தது.
அந்த அளவுதான் அணுப்பிளவு (Nuclear Fusion) நடக்க அடிப்படையான நட்சத்திரத்தின் அளவு பத்து பூமியை விட சிறிதாக இருந்தால் அது நட்சத்திரமாக இருக்க முடியாது.அது விண்வெளி கற்களாக வேண்டுமானால் இருக்கலாம்.
நம் சூரியன் பூமியைவிட சிறிதாக மாறினால்???
நீங்களே கணித்திருப்பீர்கள் என்னவாகும் என்று!!!
ஆம் அது நட்சத்திரமாக இருக்காது.சூரியன் அதன் நெருப்பு தன்மையை இழந்து அது வெறும் பாறையாக மாறிவிடும்.சூரிய குடும்பம் தனது ஒரே நட்சத்திரத்தையும் இழந்துவிடும்.சூரியனால் தான் புவியீர்ப்பு விசை ஏற்பட்டு எல்லா கோள்களும் அதன் பாதையில் சூரியனால் ஈர்க்கப்பட்டு சுற்றி வருகிறது. எல்லா கிரகங்களும் விண்வெளியில் திசைக்கு ஒரு பக்கமாக மிதந்து கொண்டு போய் விடும் .உயிர்களெல்லாம் அழிந்து விடும்.
சரி இம்முறை சூரியன் அதை அளவிலும் பூமி மிகப்பெரியதாகவும் மாறினால் என்னவாகும் என்பதை பார்க்கலாம் !!!
- பூமியின் நிறை (Mass) 333,000 மடங்கு தற்போதைய நிறையை விட அதிகமாகும்.
- பூமியுடன் மையத்தில் போதிய அளவு வெப்பம் மற்றும் அழுத்தம் உண்டாகி தன்னை ஒரு நட்சத்திரமாக மாற்றிக்கொள்ளும்.
- எந்த உயிர்களும் தப்ப வாய்ப்பு இல்லை.
- நம் சூரிய குடும்பம் தற்போது இரண்டு நட்சத்திரங்களை கொண்டிருக்கும்.
- இப்பொழுது இரண்டு நட்சத்திரமும் ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டு மற்ற கோள்கள் இரண்டையும் சுற்றிக் கொண்டிருக்கும்.
உயிர்கள் மற்ற கோள்களின் உருவாகலாம் அது நிலாவாக கூட இருக்கலாம்.
இந்த அண்ட வெளியில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமாக சூரியனை கொண்ட குடும்பமும் இருக்கிறது அதற்கு Habitable Zone இருக்கிறது.
கற்பனை செய்து பாருங்கள் நம் பூமியில் இருந்து பார்க்கும் பொழுது இரண்டு சூரியன் இருந்தால் எப்படி இருக்கும்!!!!!!
Stay connected with Madai Thirantu, the blog by Er. Nishanth Manikumar BE., BSc., where ideas come to life in Tamil and English. Get updates on the latest articles, exclusive insights, and join meaningful discussions.
👉 Click the link to follow our official WhatsApp channel: https://whatsapp.com/channel/0029Vb308E05PO17OF6THZ2L
Let’s open doors (மடை திறந்து) to new perspectives and knowledge!


1 Comments