சூரியனின் நகல் மாதிரியை அதாவது சிறிய செயற்கை சூரியனை நம்மால் பூமியில் உருவாக்க முடியுமா?


கற்பனை செய்து பாருங்கள் சிறிய வடிவிலான சூரியனை பூமியில் உருவாக்க முடிந்தால்!!!

அப்படியானால்,
  • அது நமக்கு அளவற்ற ஆற்றலை (Energy) தருமா?
  • ஆற்றலுக்காக செயல்படுத்தப்படும் நிலக்கரி மற்றும் அணு மின் நிலையத்தில் இருந்து விடுபடலாமா?
  • இந்த புதிய ஆற்றல் தற்போதைய ராக்கெட் எரிபொருளுக்கு மாற்றாக அமையுமா?
  • அதை நம்மால் கட்டுப்படுத்த இயலுமா?

சூரியன்அணுப்பிளவு (Fission) மற்றும் இணைவு (Fusion) நிகழ்ச்சியால் மகத்தான ஆற்றலை உருவாக்க கூடியது. ஒவ்வொரு நொடிகளுக்கும் 620 மில்லியன் டன் ஹைட்ரஜனை(Hydrogen) 606 மில்லியன் டன் ஹீலியத்துடன் (Helium) அதன் மையத்தில் உருக்குகிறது(fuse). இதனால் தான் மாபெரும் ஆற்றல் வெளிப்படுகிறது.

நாம் சூரியனின் நகல் மாதிரியான அதாவது சிறிய செயற்கை சூரியனை பூமியில் உருவாக்க வேண்டுமானால் ஹைட்ரஜன் அணுவை நெருக்கி(Squeeze) அதனை இணைவுக்கு(Fusion) தயார் செய்ய வேண்டும்.  அது அவ்வளவு எளிதாக அமையாது.
இந்த இணைவு(Fusion) மிகவும் அதிகப்படியான வெப்பநிலையில் மட்டுமே சாத்தியப்படும். சூரியனின் வெளிப்பரப்பு கூட 5500 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில்  எரிந்து கொண்டிருக்கும். விண்வெளி உடை கூட உங்களை அந்த வெப்பத்திலிருந்து காக்காது.
ஆனால் நாம் அதிக வெப்பத்தைத் தாங்கக்கூடிய  மீள்கடத்தியை (Superconductor) வடிவமைத்து செயற்கை சூரியனை தயார் நிலைக்குக் கொண்டு வரலாம்.

பிரகாசமான எதிர்காலத்தை உண்மையில் கொண்டுவர என்னவெல்லாமோ மேற்கொள்ள வேண்டும்!!!!!

நம் கையில் இந்த செயற்கை சூரியன் இருந்தால் அளவற்ற ஆற்றல் நமக்கு கிடைக்கும். அது சூரியனை விட சிறியது தான் அதனால் அதை 60 கால்பந்து மைதானம் அளவில் உள்ள கருவியில் பொருத்த இயலும் மற்றும் அது மூன்று ஈபிள் கோபுரம் (Eifil Tower) எடையை கொண்டதாக இருக்கும்.
செயற்கை சூரியன் செயல்பட நமக்கு இரண்டு குறிப்பிட்ட Isotope (ஒரே பெரும்பான்மையுடன் எடை மட்டும் வேறுபாடு உடைய தனிமம்) வேண்டும்.
  • Deuterium(தண்ணீரில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது)
  • Tritium(லித்தியம் அணுப் பிளவின் போது எடுக்கப்பட்டது)
சிறிய சூரியனுக்கு Fridge Magnet (குளிர்சாதன பெட்டியில் குழந்தைகள் தொட்டு விளையாடும் பொருள்) விட 1000 மடங்கு சக்தியுள்ள காந்தத்தை கொண்டு காந்தவிசை(Magnetic Field) கொடுக்க வேண்டும்.

காந்தவிசை நாம் செயற்கை சூரியனை 150 மில்லியன் டிகிரி செல்சியஸ்  வெப்பமாகும் போது நிலையான இடத்தில் வைத்து இருக்கும்.
அதிக வெப்பத்தை தாங்க ஒரு வலுவான போர்வையை (Robust Blanket) உருவாக்க வேண்டும் அது வெப்பத்தில் உருகாமல் இருக்க வேண்டும்.
எல்லா பொறியியல் பிரச்சனைகளையும் கண்டறிந்து அதை நிவர்த்தி பண்ணியபின்  செயற்கை சூரியன் நமது தற்போதைய ஆற்றல் அமைப்பு செயலாற்றலை முழுவதுமாக மாற்றி விடும்.
  • அது எந்த பசுமை இல்ல வாயுக்களையும்(Green House Gases) வெளியிடாது
  • மக்குவதற்கு ஆயிரக்கணக்கான வருடங்கள் தேவைப்படும்  
  • ஆபத்தான கதிரியக்க குப்பைகள் இருக்காது 
  • புதைபடிவ எரிபொருட்களை போன்று ஹைட்ரஜன் எளிதில் தீர்ந்து விடாது. ஹைட்ரஜன் பிரபஞ்சத்தில் ஒரு பொதுவான கூறு (Element) ஆகும்
  • இந்த ஆற்றல் இருக்கும் பொழுது வேறு எந்த ஆற்றலுக்கும் தேவை இருக்காது. 
  • பூமி பழைய நிலைக்குத் திரும்ப இது இரண்டாவது வாய்ப்பாக அமையும்.
ராக்கெட்டுகளில் இணைவு(Fusion) என்ஜின் பொருத்தினால் தற்போதைய ராக்கெட்டுகளை விட வேகமாக விண்வெளியை ஆய்வு செய்யலாம். 30 நாட்களில் செவ்வாய் கிரகத்திற்கு  சென்று விடலாம். தற்போதைய தொழில்நுட்பத்தை கொண்டு செவ்வாய்க்குச் செல்ல 9 மாதங்கள் ஆகும்.

இதையெல்லாம் படிக்கும் பொழுது அறிவியல் புனைக்கதை (Science Fiction)போன்று தெரிகிறதா!!!

உண்மையில் உலகெங்கும் உள்ள அறிவியல் அறிஞர்கள் பல வருடங்களாக ஆராய்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே நம்மிடம் சூரியன் போல் அணுப்பிளவு நடத்தும் உலைகள் (Reactor) உள்ளனஆனால் அவைகளால் நுகர்வு (Consume) செய்யும் எரிசக்தியை விட அதிகமாக தயாரிக்க முடியவில்லை.
எல்லாத்தையும் புதிய அதிக வெப்ப மீள்கடத்தி (High Temperature Superconductor) மாற்றும்.
ஒரு விலை உயர்ந்த விஞ்ஞானப் பரிசோதனை அதனை சாத்தியமாகும் அப்பொழுது ஆற்றல் எல்லோருக்கும் கிடைக்க கூடும்.

அதைக் கண்டுபிடிக்கும் அக்காலகட்டத்தில் நாம் பூமியை விட்டு விட்டு அருகாமை கிரகத்திற்கு கூட சென்று இருக்கலாம்!!!!!

Stay connected with Madai Thirantu, the blog by Er. Nishanth Manikumar BE., BSc., where ideas come to life in Tamil and English. Get updates on the latest articles, exclusive insights, and join meaningful discussions.

👉 Click the link to follow our official WhatsApp channel: https://whatsapp.com/channel/0029Vb308E05PO17OF6THZ2L

Let’s open doors (மடை திறந்து) to new perspectives and knowledge!

Post a Comment

0 Comments